Dr Anandhan's MINDCARE

மேடவாக்கம், சென்னை

மனதுக்கான சிகிச்சை, முழு மனிதரையும் கருத்தில் கொண்டு

Dr Anandhan's MINDCARE ஒரு மனநல மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை மையம். மனநல மருத்துவர்கள், உளவியல் சிகிச்சையாளர், பிற துறை மருத்துவர்கள் இங்கே இணைந்து பணியாற்றுகிறார்கள். மனநலம், உடல்நலம், சமூக நலம் மூன்றும் ஒன்றாகக் கவனிக்கப்படுகின்றன.

மனநல மருத்துவம்

25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மனநல மருத்துவர் டாக்டர் ஆனந்தன் பி. அவர்களின் ஆலோசனை. பதற்றம் (anxiety), மன அழுத்தத்தால் வரும் உடல் உபாதைகள், பெரியவர்களின் ADHD ஆகியவற்றில் சிறப்புக் கவனம்.

டாக்டர் ஆனந்தன் பற்றி (ஆங்கிலத்தில்)

உளவியல் சிகிச்சை

ஸ்மிதா ஆனந்தன் வழங்கும் சிகிச்சை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பெரியவர்கள் அனைவருக்கும். பதற்றம், மன அழுத்தம், கோபம், மனச்சோர்வு போன்றவற்றுக்கு மருந்தில்லா சிகிச்சை; தேவைப்படும்போது மருத்துவ சிகிச்சையுடன் இணைந்து.

உளவியல் சிகிச்சை பற்றி (ஆங்கிலத்தில்)

ஒரே குழு

மனநல மருத்துவர்கள், பிற துறை மருத்துவர்கள், உளவியல் சிகிச்சையாளர், மனநல சமூகப் பணியாளர், செவிலியர்கள். ஒருங்கிணைந்த, தனிநபரை மையமாகக் கொண்ட அணுகுமுறை.

எங்கள் குழு (ஆங்கிலத்தில்)

உங்கள் முதல் வருகை

  1. மையத்தை அழைத்து நேரம் பெற்றுக்கொள்ளுங்கள். ஆலோசனைகள் அனைத்தும் முன்பதிவின் பேரில் மட்டுமே.
  2. முதலில் எங்கள் குழுவில் ஒருவர் உங்களைச் சந்திப்பார். உதவி மனநல மருத்துவர், உளவியலாளர் அல்லது சமூகப் பணியாளர் உங்கள் பிரச்சினைகளைக் கேட்டு, விவரங்களைக் குறித்துக்கொள்வார். முக்கியமான எதுவும் விடுபடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
  3. ஆலோசனை. பிறகு மனநல மருத்துவரையோ சிகிச்சையாளரையோ சந்திப்பீர்கள். என்ன நடக்கிறது, என்ன செய்யலாம் என்பதை அவர் விளக்குவார்.
  4. தொடர் ஆலோசனை. அடுத்தடுத்த சந்திப்புகள் நேரில் நடக்கும். ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்கள் தொலைபேசி அல்லது ஆன்லைன் வழியாகவும் பேசலாம்.
நூல்: மனம் ஒன்று மார்க்கங்கள் நூறு, டாக்டர் பி. ஆனந்தன்

நூல்

மனம் ஒன்று மார்க்கங்கள் நூறு

மனநல மருத்துவர் டாக்டர் பி. ஆனந்தன் எழுதிய தமிழ் நூல்.

Book: When Stress Becomes Illness, by Dr. Anandhan P

நூல் (ஆங்கிலம்)

When Stress Becomes Illness

மன அழுத்தம் உடலை எப்படி மெல்ல மாற்றுகிறது என்பதை விளக்கும் நூல். மனம், உடல், மருத்துவம் பற்றி டாக்டர் ஆனந்தன் பி. எழுதியது.

கட்டுரைகள்

மனநலம் பற்றிய எங்கள் கட்டுரைகள் தற்போது ஆங்கிலத்தில் உள்ளன.

கட்டுரைகளைப் படிக்க