
தமிழக அரசியல்
- மனநல மருத்துவர் ஆனந்தன்

- Oct 5, 2022
- 1 min read
👇 Click to watch the video
திரு கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவருடைய அறிக்கைகள், மேடைகள்/பிரபல தொலைக்காட்சி சேனல்களின் நேர்காணல்கள், தேர்தல் பிரச்சார மேடைகள் என பல்வேறு இடங்களில் அவர் பேசுபவை.... கவனித்தீர்களேயானால் நன்கு தெரியும். அவர் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களுக்கு கண்ணியமாக பதில் சொல்வாரே ஒழிய, யார் மீதும் வெறுப்பு இருக்காது. காரணம் 14 வயதிலிருந்து இலக்கியம், உலக சினிமா, வரலாறு என படித்து மனிதர்களை பிரபஞ்சத்தை விசாலமாக பார்க்கும் மனப் பக்குவத்தை அடைந்தவர். ஞானம் என்றால் என்ன? என்பதை அறிந்த ஞானி. ஞானம் அடைவது என்பது, "நம்மை மீறி அவ்வப்போது மாற்றம் அடையும் மூளை உள்ள மனிதர்களுக்கு சாத்தியமில்லை," என்பதை அறிந்த மனிதநேயமிக்க மாமனிதன். கலைஞன், உலக நாயகன் என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான். அவரே சொன்னது போல அடுத்த 200 ஆண்டுகால அரசியலுக்கான விதையை இந்திய மண்ணில் விதைத்திருக்கிறார். எம்எல்ஏ எம்பி கவுன்சிலர் கனவுகளுடன் சுயலாபத்துக்காக அவ்வப்போது வந்தார்கள் சென்றார்கள்.
*மக்கள் நீதி மய்யம் செய்வது பழி போடும் அல்லது பழி வாங்கும் அரசியல் அல்ல. வழிகாட்டும் அரசியல்.
*இந்தியாவை வழிநடத்துவது கனவு, அதில் தமிழகம் முதலிடத்தில்.
*கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே! -
கமல்ஹாசன்----





Comments